/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சிவராத்திரியை முன்னிட்டு கோவில்களில் வழிபாடு
/
சிவராத்திரியை முன்னிட்டு கோவில்களில் வழிபாடு
ADDED : ஜூலை 24, 2025 01:30 AM
கரூர், கரூர் மாவட்டம், நன்செய் புகழூர் பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீஸ்வரர் கோவிலில், ஆடி மாத சிவராத்திரியை முன்னிட்டு மேகபாலீஸ்வரருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
* திருக்காடுதுறையில் உள்ள மாதேஸ்வரி அம்பிகை சமேத மாதேஸ்வரன் கோவில், நொய்யல் அருகே சேமங்கி மங்களநாதர் சமேத கமலாம்பிகை கோவில், புன்னம் புன்னைவனநாதர் உடனுறை புன்னைவன நாயகி கோவில், குந்தாணி பாளையம் நத்தமேடு ஈஸ்வரன் கோவில்களில் சிறப்பு வழிப்பாடு நடந்தது.