/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சேதமடைந்துள்ள மின்கம்பம் புதிதாக அமைக்கப்படுமா
/
சேதமடைந்துள்ள மின்கம்பம் புதிதாக அமைக்கப்படுமா
ADDED : ஆக 03, 2025 01:11 AM
கிருஷ்ணராயபுரம், கண்ணமுத்தாம்பட்டி நெடுஞ்சாலை அருகில், மின்கம்பம் சேதமடைந்துள்ளதால், மக்கள் அச்சத்துடன் செல்கின்றனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த வீரியபாளையம் பஞ்., கண்ணமுத்தாம்பட்டி முதல் பஞ்சப்பட்டி வரை நெடுஞ்சாலை செல்கிறது. சாலை அருகில் பழமையான மின்கம்பம் உள்ளது. இதிலிருந்து குடியிருப்புகளுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது.
தற்போது கம்பத்தின் நுனி பகுதியில் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து வருகிறது. இதனால் மேல் பகுதி சேதம் ஏற்பட்டுள்ளது.ஆடி காற்று வீசி வருவதால், பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த சாலை வழியாக மக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. எனவே, பழைய மின்கம்பத்தை மாற்றி விட்டு, புதிதாக அமைக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

