sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ சிதிலமடைந்த குளங்களை துார்வார வேண்டுகோள்

சிதிலமடைந்த குளங்களை துார்வார வேண்டுகோள்

சிதிலமடைந்த குளங்களை துார்வார வேண்டுகோள்


ADDED : நவ 18, 2025 01:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 18, 2025 01:27 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அரவக்குறிச்சி,அரவக்குறிச்சி ஒன்றியத்தில், நீர் இல்லாமல் சிதிலமடைந்து கிடக்கும் குளங்களை துார்வார விவசாயிகள், பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அரவக்குறிச்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நாகம்பள்ளி, கொடையூர், வெஞ்சமாங்

கூடலுார், புங்கம்பாடி மேல் பாகம், கீழ் பாகம், கோவிலுார், எருமார்பட்டி, ஈசநத்தம், அம்மாபட்டி, ஜமீன் ஆலமரத்துப்பட்டி, வேலம்பாடி, சாந்தப்பாடி,

சேந்தமங்கலம் கீழ் பாகம், மேல் பாகம் உள்ளிட்ட 18 ஊராட்சிகள் உள்ளன.

இந்த ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில் சிறு சிறு குளங்கள் உள்ளன. மேலும் நெல்லிக்கோம்பை, சாந்தப்பாடி, அஞ்சாகவுண்டனுார் ஆகிய கிராமங்களில் சற்று பெரிய குளங்களும் உள்ளன.

மழைக்காலங்களில் பெய்யும் மழை நீர், குளங்களில் தேங்கி நிற்பதால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகளின் கிணறுகள், வீடு, தோட்டங்களில் உள்ள ஆழ்துளை

கிணறுகளில் நீர்மட்டம் உயரும். இதனால் தண்ணீர் தேவை பூர்த்தியாகும்.

ஏற்கனவே, 30க்கும் மேற்பட்ட குளங்கள் சிதிலமடைந்து நீர் இல்லாமல், மழைக்காலங்களில் பெய்யும் நீரை சேமிக்க முடியாத நிலை உள்ளது. தற்போது நீர் இல்லாமல் சிதிலமடைந்து கிடக்கும் குளங்களை துார்வார விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us