/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
/
கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
ADDED : நவ 23, 2025 01:07 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்., மேட்டுமருதுார் கிராமத்தில் அன்ன காமாட்சி, மாசி பெரியண்ணன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்ய குடிபாட்டுக்காரர்கள், கிராம பொதுமக்கள் முடிவு செய்தனர்.
அதன்படி, கோவில் புனரமைப்பு பணிகள் முடிந்தன. இதையடுத்த, நேற்று காலை, 10:00 மணிக்கு, மருதுார் காவிரி ஆற்றில் இருந்து கோவில் குடிப்பாட்டுக்காரர்கள், கிராம மக்கள் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
மேட்டுமருதுார் முக்கிய தெருக்கள் வழியாக ஊர்வலம் சென்று, அன்ன காமாட்சியம்மன், மாசி பெரியண்ணன் கோவிலில் சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது. மாலை, 5:00 மணிக்கு, புனிதநீர் அடங்கிய கும்பத்தை யாக வேள்வி சாலையில் வைத்து விக்னேஸ்வர பூஜை, மஹா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம் நடந்தது. தொடர்ந்து, வாஸ்து சாந்தி பூஜை உடன் முதல் கால யாக வேள்வி பூஜை நடந்தது. இன்று காலை, 10:00 மணிக்கு, இரண்டாம் கால பூஜையுடன் கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களள் முழங்க புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது.

