ADDED : மார் 20, 2026 07:24 AM
கரூர்:கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், விழிப்புணர்வு கையெ-ழுத்து இயக்கம் நடந்தது.
மாவட்ட
தேர்தல் அலுவலர் ரவிகுமார் தொடங்கி வைத்தார். நான்கு தொகுதிகளிலும்,
பொது தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு ஏப்., 23ல் நடக்கிறது. 100
சதவீதம் ஓட்டு குறித்து துண்டு பிரசு-ரங்கள், பேரணி, கோல போட்டி,
வாக்காளர் உறுதிமொழி ஆகிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து
வருகின்றன.
இதில், தேர்தல் ஓட்டுப்பதிவு குறித்து விழிப்புணர்வு
கையெ-ழுத்து இயக்கத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் ரவிகுமார் தொடங்கி
வைத்தார். தேர்தல் வாசகங்கள் அடங்கிய விழிப்பு-ணர்வு சுய புகைப்பட
பதாகையில், பொதுமக்கள் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ., விமல்ராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர்
(வளர்ச்சி) மனோகரன், கலெக்டர் நேர்முக உதவியாளர் (சத்துணவு)
தேன்மொழி உள்பட பலர் பங்கேற்றனர்.
