ADDED : மே 29, 2026 05:48 AM

அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம்லாலாப்பேட்டை மண்டியில் வாழைத்தார்கள் விற்பனை நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, வீரகுமாரன்பட்டி, வீரவள்ளி, மகாதானபுரம், பொய்கைப்புத்துார், திருக்காம்புலியூர் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர். வாழைத்தார்களை அறுவடை செய்து, லாலாப்பேட்டை வாழைக்காய் ஏலம் கமிஷன் மண்டி கொண்டு வந்து விற்பனை
செய்கின்றனர். நேற்று நடந்த ஏலத்தில் பூவன் வாழைத்தார் ஒன்று, 250 ரூபாய், கற்பூரவள்ளி வாழைத்தார், 150 ரூபாய், ரஸ்தாளி வாழைத்தார், 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வாழைத்தார்களை உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் வாங்கி சென்றனர்.
