/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கருக்கலைப்பு மாத்திரைகளை விற்றால் 10 ஆண்டு சிறை: கலெக்டர் எச்சரிக்கை

ADDED : பிப் 05, 2025 01:29 AM
கருக்கலைப்பு மாத்திரைகளை விற்றால் 10 ஆண்டு சிறை: கலெக்டர் எச்சரிக்கை
கரூர்:கருக்கலைப்பு மாத்திரைகளை மருந்தகத்தின் வாயிலாக விற்பனை செய்தால், 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.
கர்ப்ப காலத்தில் உள்ள பெண்கள், டாக்டர் பரிந்துரையின்றி கர்ப்பத்தை கலைக்க முற்பட்டு, பொது இடங்களில் செயல்படும் மருந்தகங்கள் வாயிலாக கருக்கலைப்பு மாத்திரைகளை உட்கொள்ள கூடாது. அப்படி உட்கொண்டால் அதிகப்படியான ரத்தப்போக்கு, கடுமையான வயிற்று வலி, அதிக சோர்வு மற்றும் மயக்கம் ஏற்படும். கர்ப்பப்பை சுருக்கம் அதிகப்
படியான அளவில் ஏற்பட்டு, சில சமயங்களில் உடனடி மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் உயிரிழப்பு உண்டாகும்.
இந்திய தண்டனை சட்டம், 1860 பிரிவு, 315 மற்றும் 316-ன்படி, டாக்டர் பரிந்துரை இல்லாமல், கருக்கலைப்பு மாத்திரைகள் மருந்தகத்தின் வாயிலாக, விற்பனை செய்யப்படுவது தண்டனைக்குரிய குற்றமாகும். இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது, 10 ஆண்டு சிறை தண்டனை வரை விதிக்கப்படும். எனவே, கரூர் மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பான கருக்
கலைப்பு நடவடிக்கைகளை நாடாமல், தோகைமலை அரசு மேம்படுத்தப்பட்ட வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், சின்னதாராபுரம் அரசு மேம்படுத்தப்பட்ட வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், இனுங்கூர் மேம்படுத்தப்பட்ட வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் உள்பட அனைத்து அரசு மருத்துவமனைகள், கரூர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் இலவசமாக, பாதுகாப்பான கருக்கலைப்பு, குடும்ப நல அறுவை சிகிச்சை நல சேவைகள் வழங்கப்படுவதை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இத்தகவலை, கரூர் கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.