தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மக்கள் நீதிமன்றத்தில்1,583 வழக்குகளுக்கு தீர்வு

மக்கள் நீதிமன்றத்தில்1,583 வழக்குகளுக்கு தீர்வு

மக்கள் நீதிமன்றத்தில்1,583 வழக்குகளுக்கு தீர்வு


ADDED : மார் 09, 2025 02:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2025 02:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மக்கள் நீதிமன்றத்தில்1,583 வழக்குகளுக்கு தீர்வு

கரூர்:கரூர் மற்றும் குளித்தலையில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில், 1,583 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், நாடு முழுவதும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மக்கள் நீதிமன்றம் நடந்து வருகிறது. நேற்று கரூர், குளித்தலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் ஆகிய நீதிமன்றங்களில், எட்டு அமர்வுகளில் மக்கள் நீதிமன்றம் நடந்தது. அதில், வங்கி சிவில் வழக்கு, காசோலை வழக்கு, மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்கு உள்பட, 1,904 வழக்குகள் சமரச தீர்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டன.

இறுதியாக, 1,583 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு, 13 கோடியே, 57 லட்சத்து, 89 ஆயிரத்து, 45 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. கரூரில் நடந்த, மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார். அப்போது, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் அனுராதா மற்றும் வக்கீல்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us