/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அசாம் மாநிலத்தை சேர்ந்த 2 இளம் பெண்கள் மீட்பு
/
அசாம் மாநிலத்தை சேர்ந்த 2 இளம் பெண்கள் மீட்பு
ADDED : ஏப் 12, 2025 01:25 AM
அசாம் மாநிலத்தை சேர்ந்த2 இளம் பெண்கள் மீட்பு
கரூர், அசாம் மாநிலத்தில் இருந்து, கரூர் வந்த இரண்டு இளம் பெண்களை போலீசார் மீட்டனர்.
அசாம் மாநிலம், ஜம்பர்சி பகுதியை சேர்ந்த கிருஷ்ணா மோனிராய் - பிரனதி ராய் தம்பதியின் மகள் சுமித்ரா ராய், 18. இவர் மூன்று மாதங்களுக்கு முன், அதே பகுதியை சேர்ந்த, 16 வயது பெண்ணுடன் ரயில் மூலம், கரூர் மாவட்டம், புகழூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தார்.
பிறகு, புகழூர் அருகே மூர்த்திபாளையத்தில், சுமித்ரா ராயும், மற்றொரு பெண்ணும் வாடகைக்கு வீடு எடுத்து, கூலி வேலை செய்து வந்தனர். இந்நிலையில், சுமித்ரா ராயின் தாய் பிரனதி ராய், அசாம் மாநிலம் போலீஸ் ஸ்டேஷனில், மகளை காணவில்லை என புகார் செய்திருந்தார்.
பிறகு, அசாம் மாநில போலீசார் நடத்திய விசாரணையில், மொபைல் போன் டவர் மூலம் சுமித்ரா ராய் மற்றும் உடன் வந்த பெண்ணுடன், கரூர் மாவட்டம், புகழூர் அருகே மூர்த்திப்பாளையத்தில் தங்கியிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, நேற்று அசாம் மாநில போலீசார், வேலாயுதம்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து போலீசாரின் உதவியை நாடினர். பிறகு, மூர்த்திபாளையத்தில் தங்கியிருந்த சுமித்ரா ராய் மற்றும் உடன் வந்த பெண்ணையும் வேலாயுதம்பாளையம் போலீசார் மீட்டு, அசாம் மாநிலத்துக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

