/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரியில்36 மணி நேர மெகா ஹேக்கத்தான் போட்டி

ADDED : பிப் 23, 2025 01:37 AM
எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரியில்36 மணி நேர மெகா ஹேக்கத்தான் போட்டி
கரூர்:கரூர், எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரியில், ஐ.பி.எம்., நிறுவனத்துடன் இணைந்து, 36 மணி நேர தொடர் ஹேக்கத்தான் போட்டி நடந்தது.
கல்லுாரி தலைவர் ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக, அட்ராய்ட் டெக்னாலஜிஸ் இனோவேட்டிவ் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் மேலாளர் வினீத்குமார், கோவை பாஷ் குளோபல் சாப்ட்வேர் டெக்னாலஜீஸ் நிறுவனத்தை சேர்ந்த விக்னேஷ் காளிராஜன் ஆகியோர் பங்கேற்று, மாணவர்களுடன் தங்களது அனுபவங்கள் குறித்தும், நடைமுறை கற்றலின் முக்கியத்துவம் மற்றும் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் ஆகியவற்றை பகிர்ந்து கொண்டனர். பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, 59 அணிகளில் இருந்து, 300-க்கும் மேற்பட்ட மாணவர், மாணவியர் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியில் முதல் ஐந்து இடங்களை பெற்ற மாணவர்களுக்கு, கல்லுாரி நிர்வாகம் சார்பில் பாராட்டு சான்றிதழ், ஒரு லட்சம் மதிப்புள்ள காசோலை பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், இணை செயலாளர் சரண்குமார், நிர்வாக இயக்குனர் குப்புசாமி, முதல்வர் முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.