/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்.,சந்தை ரூ.4 லட்சத்துக்கு ஏலம்
/
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்.,சந்தை ரூ.4 லட்சத்துக்கு ஏலம்
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்.,சந்தை ரூ.4 லட்சத்துக்கு ஏலம்
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்.,சந்தை ரூ.4 லட்சத்துக்கு ஏலம்
ADDED : மார் 02, 2025 01:32 AM
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்.,சந்தை ரூ.4 லட்சத்துக்கு ஏலம்
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து வாரச்சந்தை, ரூ. 4 லட்சத்துக்கு ஏலத்தில் விடப்பட்டது.
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து தலைவர் சேதுமணி தலைமை வகித்தார். இதில், டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வாரச்சந்தையில், மூன்றாண்டு காலத்திற்கு சுங்க வசூல் செய்வதற்காக ஏலம் நடந்தது.
முதலில் மூன்று லட்சத்தில் இருந்து தொடங்கி இறுதியாக, 4 லட்சத்து 2,500 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. ஏலத்தில் கிருஷ்ணராயபுரம், திருச்சி, லாலாப் பேட்டை பகுதிகளில் இருந்து, 10 மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து செயலாளர் ருக்குமணி மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர்.