/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாவட்டத்தில் 43,061 விவசாயிகளுக்கு ரூ.6.02 கோடி மானியமாக வழங்கல்
/
மாவட்டத்தில் 43,061 விவசாயிகளுக்கு ரூ.6.02 கோடி மானியமாக வழங்கல்
மாவட்டத்தில் 43,061 விவசாயிகளுக்கு ரூ.6.02 கோடி மானியமாக வழங்கல்
மாவட்டத்தில் 43,061 விவசாயிகளுக்கு ரூ.6.02 கோடி மானியமாக வழங்கல்
ADDED : ஜூலை 22, 2024 08:46 AM
கரூர், : தோட்டக்கலைத்துறை சார்பில், கடந்த, மூன்-றாண்டுகளில், 43,061 விவசாயிகளுக்கு, 6.02 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
மாடி தோட்டங்களில் காய்கறி செடிகளை வளர்ப்பவர்களை ஊக்குவிக்கும் வகையில், தமி-ழக அரசு பல்வேறு மானியங்களை வழங்கி வரு-கிறது. அந்த வகையில், கரூர் மாவட்டத்தில் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தோட்டக்கலை பயிர்களின் பரப்பு விரிவாக்கம், நிழல்வலை கூடாரம் அமைத்தல், குறைந்த செலவிலான வெங்காய சேமிப்பு கிடங்கு, காய்-கறி விதை தளைகள், ஊட்டச்சத்து தளைகள், பழச்செடி தொகுப்பு வழங்குதல், மாடி தோட்டத்த-ளைகள், துல்லிய பண்ணைய திட்டம், வாழையில் ஊடுபயிராக காய்கறிகள் சாகுபடி ஊக்குவித்தல், தென்னையில் ஊடுபயிராக வாழை, அரசு மாணவியர் விடுதிகளில் தோட்டம் அமைத்தல் ஆகிய திட்டங்களுக்கு, 20,275 பய-னாளிகளுக்கு, 4.28 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சின்ன வெங்காயம் பரப்பு விரிவாக்கம், அவ-கேடோ பரப்பு விரிவாக்கம், நிரந்தர பந்தல் அமைத்தல், தற்காலிக பந்தல் அமைத்தல், அங்-கக பண்ணையம், பாரம்பரிய காய்கறி ரகங்கள் சாகுபடி ஊக்குவித்தல் ஆகிய இனங்களின் கீழ், 2,360 பயனாளிகளுக்கு, 4.73 கோடி ரூபாய் மானி-யமாக வழங்கப்பட்டுள்ளது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல்லாண்டு பயிர்கள் சாகுபடி பரப்பு விரிவாக்கம், பழச்செடி தொகுப்பு வழங்குதல், காளான் வளர்ப்பு குடில், காய்கறி பயிர்கள் சாகுபடியை ஊக்குவித்தல் மற்றும் காய்கறி விதை தளைகள் வழங்குதல் ஆகிய இனங்கள், 20,384 பயனாளி
களுக்கு, 1 கோடி ரூபாய், தேசிய மூங்கில் இயக்கம் மூலம், 42 பயனாளிகளுக்கு, 12 லட்சம் ரூபாய் மானியத்தில் மூங்கில் பரப்பு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்-பயிர்கள் துறை சார்பில், கடந்த மூன்று ஆண்டு-களில் மொத்தம், 43,061 விவசாயிகளுக்கு, 6.02 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ள-ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.