/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலை நகராட்சி கூட்டத்தில் 80 தீர்மானங்கள் நிறைவேற்றம்
/
குளித்தலை நகராட்சி கூட்டத்தில் 80 தீர்மானங்கள் நிறைவேற்றம்
குளித்தலை நகராட்சி கூட்டத்தில் 80 தீர்மானங்கள் நிறைவேற்றம்
குளித்தலை நகராட்சி கூட்டத்தில் 80 தீர்மானங்கள் நிறைவேற்றம்
ADDED : ஆக 29, 2024 07:47 AM
குளித்தலை: குளித்தலை நகராட்சி கூட்ட அரங்கில் நேற்று முன்தினம் அவசர கூட்டம், சாதாரண கூட்டம் நடந்தது.
நகராட்சி தலைவர் சகுந்தலா தலைமை வகித்தார். துணைத் தலைவர் கணேசன், நகராட்சி கமிஷனர் நந்தகுமார், பொறியாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக 16வது வார்டு உறுப்பினர் சுரேஷ் உயிரிழப்பு மற்றும் உயிரிழந்த நகராட்சி பணியாளர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர். இதில் ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து, சாதாரண கூட்டத்தில் நகராட்சி மேலாளர் தேவராஜ், 73 தீர்மானங்களை வாசித்தார். அனைத்தும் தீர்மானங்களும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. ஐந்து நிமிடத்தில் இரண்டு கூட்டங்களும் முடிவு பெற்றது குறிப்பிடத்தக்கது. கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.