/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலை, தோகைமலையில் மக்களிடம் பெற்ற 975 மனு
/
குளித்தலை, தோகைமலையில் மக்களிடம் பெற்ற 975 மனு
ADDED : ஜூலை 24, 2024 12:24 AM
குளித்தலை : குளித்தலை அடுத்த, சத்தியமங்கலம் பஞ்., அய்யர் மலையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. ஆர்.டி.ஓ., தனலட்சுமி தலைமை வகித்தார். பஞ்., தலைவர்கள் சத்தியமங்-கலம் பாப்பாத்தி, திம்மம்பட்டி செல்வி, இரணியமங்கலம் ரம்யா, தாசில்தார் சுரேஷ், டி.எஸ்.ஓ., ஜெயவேல்காந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுமக்களிடம் இருந்து, எம்.எல்.ஏ., மாணிக்கம் பல்வேறு விதமான, 393 கோரிக்கை மனுக்களை பெற்றார். ஒன்றிய தி.மு.க., செயலர் சந்திரன், ஆர்.ஐ..ஸ்ரீவித்யா, பஞ்., செயலா-ளர்கள், ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கோரிக்கை மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலு-வலர்களிடம் வழங்கப்பட்டது.
இதேபோல், நங்கவரம் குறுவட்ட வருவாய் கிராமம், சேப்ளாப்-பட்டி சமுதாய மன்றத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. பஞ்.,தலைவர்கள் சேப்ளாப்பட்டி விமலா, முத-லைப்பட்டி மணிகண்டன், ஆர்ச்சம்பட்டி தேவிகா, தனிதாசில் தார் மகாமுனி, ஆர்.ஐ., பானுமதி உள்பட பலர் பங்கேற்றனர். 582 மனுக்களை எம்.எல்.ஏ., மாணிக்கம் மக்களிடம் இருந்து பெற்றார்.

