/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வாசிப்பு இயக்கம் சார்பில் கரூர் அரசு பள்ளி ஆசிரியர் எழுதிய புத்தகம் இடம் பெற்றது
/
வாசிப்பு இயக்கம் சார்பில் கரூர் அரசு பள்ளி ஆசிரியர் எழுதிய புத்தகம் இடம் பெற்றது
வாசிப்பு இயக்கம் சார்பில் கரூர் அரசு பள்ளி ஆசிரியர் எழுதிய புத்தகம் இடம் பெற்றது
வாசிப்பு இயக்கம் சார்பில் கரூர் அரசு பள்ளி ஆசிரியர் எழுதிய புத்தகம் இடம் பெற்றது
ADDED : செப் 18, 2024 06:57 AM
கரூர், : அரசு பள்ளிகளில், வாசிப்பு இயக்கம் சார்பில் வழங்கப்படும் புத்தகத்தில், கரூர் அரசு பள்ளி ஆசிரியர் எழுதிய கதை சொல்லும் மீன் புத்தகம் இடம் பெற்றுள்ளது.
முதல் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு வாசிப்பு திறன் மேம்பட, நற்பண்புகள் வளர பள்ளிக் கல்வித்துறை வாசிப்பு இயக்கம் என்ற ஒரு புதுவாசல் திறக்கப்பட்டுள்ளது. நுழை, நட, ஓடு, பற என ஆழமான கருத்துக்களுடன், அழகிய படங்களுடன், எளிய நடையில் புத்தகங்கள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அந்த சின்ன, சின்ன புத்தகங்கள் மாணவ, மாணவிகளின் மனங்களை கொள்ளையடித்த வருகிறது. நடப்பு கல்வியாண்டில், 70 புத்தகங்கள், ஒரு வாசிப்பு இயக்க கையேடு ஆகியவை, ஒரு கோடியே 31 லட்சத்து, 68 ஆயிரத்து, 48 பிரதிகள் அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில், கரூர் மாவட்டம் கோடங்கிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் சாந்தி எழுதிய 'கதை சொல்லும் மீன்' என்ற புத்தகமும் இடம் பெற்றுள்ளது.
இது குறித்து, ஆசிரியர் சாந்தி கூறியதாவது: புத்தகம் கல்வி மட்டுமின்றி படைப்புத்திறன், கற்பனை வளம், தொடர்ச்சியான கற்றல், விடாமுயற்சி ஆகியவையே சிறந்த சாதனைகளை உருவாக்க துணை புரியும். பள்ளி குழந்தைகளிடம் உரையாடலை தொடங்கவும், இயல்பாக உரையாடவும் வாசிப்பு தான் வாசலாக அமையும். முதற்கட்டமாக, 53 கதை புத்தகங்கள் ஆசிரியர், மாணவர்களால் உருவாக்கப்பட்டு தமிழ்நாடு பாடநுால் கழகம் வாயிலாக பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்ட வாசிப்பு இயக்கத்திற்கான கதைகள் உருவாக்கும் பயிற்சி பிப்., மாதம் நடந்தது. கரூர், நாமக்கல், சேலம் உள்பட எட்டு மாவட்டங்களிலிருந்து மாவட்டத்திற்கு ஒருவராக எட்டு பேர் கலந்து கொண்டனர். அதில், கரூரில் இருந்து நான் கலந்து கொண்டேன். அதன் அடிப்படையில், கதை சொல்லும் மீன் என்ற கதை எழுதி இருக்கிறேன். பல புத்தகங்கள் எழுதிய போதும், குழந்தைகளுக்கான புத்தகம் முதன்முறையாக எழுதி உள்ளேன். மாணவர்களின் கற்பனை திறனை வளர்க்க கூடிய மனநிலையை உருவாக்குவது ஆசிரியர்கள் கடைமையாகும். மீன், ஆமை, அவர்களது நண்பன், படகு ஓட்டும் கவின் ஆகியோர் குறித்து கதை எழுதி இருக்கிறேன். இந்த கதை அச்சிடப்பட்டு புத்தகமாக பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.
இவ்வாறு கூறினார்.

