/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வெள்ளியணை அரசு மேல்நிலை பள்ளியில் ஆண்டு விழா
/
வெள்ளியணை அரசு மேல்நிலை பள்ளியில் ஆண்டு விழா
ADDED : பிப் 25, 2025 04:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்டம், வெள்ளியணை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடந்தது.
பள்ளி தலைமையாசிரியை அமலிடெய்சி தலைமை வகித்தார். பள்ளி கட்டட குழு தலைவர் பாலு, ஒலிம்பிக் தீபம் ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து, பள்ளி மாணவிகள் சார்பில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் சான்றிதழ், பரிசு வழங்கினர்.நிகழ்ச்சியில் பெற்றோர்கள், பொதுமக்கள் உள்பட பலர் பங்கேற்-றனர்.