/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரவக்குறிச்சி பள்ளி மாணவர்கள் கூடை பந்தாட்டத்துக்கு தேர்வு
/
அரவக்குறிச்சி பள்ளி மாணவர்கள் கூடை பந்தாட்டத்துக்கு தேர்வு
அரவக்குறிச்சி பள்ளி மாணவர்கள் கூடை பந்தாட்டத்துக்கு தேர்வு
அரவக்குறிச்சி பள்ளி மாணவர்கள் கூடை பந்தாட்டத்துக்கு தேர்வு
ADDED : ஆக 01, 2024 07:28 AM
அரவக்குறிச்சி: கூடை பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்ற, அரவக்குறிச்சி அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள், மாவட்ட போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
அரவக்குறிச்சி குறுவளமைய கூடை பந்தாட்ட போட்டி, புன்னம் சத்திரம் தனியார் பள்ளியில் நேற்று நடைபெற்றது. பள்ளப்பட்டி கிரசண்ட் பள்ளியுடன் விளையாடி, அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்-றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர். இதனால் மாவட்ட விளையாட்டு போட்டியில் விளையாட தகுதி பெற்றனர். 14 வயதுக்குட்பட்டோர் போட்டியில் ரெனோவா ரெக்ஸ், ஆரோக்கிய அந்தோணி நிஷாந்த், முகமது அப்துல் ரகுமான், தருண், ஹரிஹரன், அந்தோணி தேவ சகாயம், முகமது அப்துல் வாஜீத், முகமது பஜ்லுல், முகமது ரிபாஸ் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றனர்.
மேலும் வளையபந்து போட்டியில் முதன்முறையாக கிரசண்ட், பரமத்தி, சௌந்தராபுரம் பள்ளிகளுடன் வென்று குறுவள மைய போட்டியில் இரண்டாம் இடம் பெற்று அபிநயா, கிருஷ்ண-வேணி இரட்டையர் பிரிவில் ரன்னர் பெற்றனர். கேரம் விளை-யாட்டில் அப்ரின் ஷிபா இரண்டாம் இடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் சங்கர்,
பட்டதாரி ஆசிரியர் சகாய வில்சன், ஷகிலா பானு ஆகியோரை வட்டாரக்கல்வி அலுவலர்கள் பாண்டித்துரை, சதீஷ்குமார், தலைமை ஆசிரியர் சாகுல் அமீது உள்ளிட்டோர் பாராட்டினர்.