/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
லாலாப்பேட்டை, அரவக்குறிச்சியில் முதல்வர் மருந்தகம் திறப்பு விழா
/
லாலாப்பேட்டை, அரவக்குறிச்சியில் முதல்வர் மருந்தகம் திறப்பு விழா
லாலாப்பேட்டை, அரவக்குறிச்சியில் முதல்வர் மருந்தகம் திறப்பு விழா
லாலாப்பேட்டை, அரவக்குறிச்சியில் முதல்வர் மருந்தகம் திறப்பு விழா
ADDED : பிப் 25, 2025 04:38 AM
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றியத்தில், முதல்வர் மருந்தகம் திறப்பு விழா லாலாப்பேட்டையில் நடந்தது.
குளித்தலை எம்.எல்.ஏ., மாணிக்கம் துவக்கி வைத்தார். கிருஷ்ண-ராயபுரம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட லாலாப்பேட்டை, பஞ்சப்பட்டி ஆகிய இடங்களில் மலிவு விலையில் மக்களுக்கு மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யும் முதல்வர் மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது.
மேலும் மாநிலம் முழுவதும், 1,000 கடைகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.அதன்படி நேற்று காலை கள்ளப்பள்ளி பஞ்சாயத்து, லாலாப்-பேட்டை பழைய நெடுஞ்சாலை காந்தி சிலை அருகில் கூட்டுறவு நிர்வாகத்தின் கீழ், முதல்வர் மருந்தகம் திறக்கப்பட்டது.குளித்தலை கோட்ட சரக பதிவாளர் திருமதி, கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க., பொறுப்பாளர் கதிரவன், சிந்தலவாடி கூட்டுறவு வங்கி செயலாளர் அப்துல் அஜிஸ், முன்னாள் கள்ளப்-பள்ளி பஞ்சாயத்து தலைவர் சக்திவேல், தி.மு.க., பேச்சாளர் அண்-ணாவி மற்றும் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் கலந்து கொண்-டனர்.* இதேபோல், அரவக்குறிச்சியிலும் முதல்வர் மருந்தகம் திறக்கப்-பட்டது. பேரூராட்சி தலைவர் ஜெயந்தி மணிகண்டன், மருந்தகத்-திற்கு வந்த நோயாளிகளுக்கு மருந்து வழங்கினார். பேரூராட்சி கவுன்சிலர்கள், தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.