/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இருளில் மூழ்கிய நிலையில் மாநகராட்சி பகுதிகள்: பெரும் அச்சத்தில் மக்கள்
/
இருளில் மூழ்கிய நிலையில் மாநகராட்சி பகுதிகள்: பெரும் அச்சத்தில் மக்கள்
இருளில் மூழ்கிய நிலையில் மாநகராட்சி பகுதிகள்: பெரும் அச்சத்தில் மக்கள்
இருளில் மூழ்கிய நிலையில் மாநகராட்சி பகுதிகள்: பெரும் அச்சத்தில் மக்கள்
ADDED : செப் 10, 2024 05:25 AM
கரூர்: கரூர் மாநகராட்சியில், சில பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளது. இதனால், பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
கடந்த, 2011 அக்டோபர் மாதம் நடந்த உள்ளாட்சி தேர்தலின் போது, கரூர் மாநகராட்சியுடன், தான்தோன்றிமலை, இனாம் கரூர் நகராட்சிகள் மற்றும் சணப்பிரட்டி பஞ்சாயத்து இணைக்கப்-பட்டது. இதையடுத்து, அந்த பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் உள்ளிட்ட எக்ஸ்டன்சன் பகுதிகளில் குடியிருப்புகள் பெருகியது. ஆனால், போதிய மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு விளக்குகள் போடப்படவில்லை. மேலும், ஏற்கனவே உள்ள மின் கம்பங்களிலும்,
விளக்குகள் சரிவர எரிவதில்லை.குறிப்பாக, சணப்பிரட்டி பகுதியில் உள்ள ஐந்து வார்டுகள் மற்றும் காந்தி கிராமம் பகுதிகளில் விரிவாக்கம் செய்யப்பட்ட பெரும்பாலான தெருக்களில் உள்ள, மின் கம்பங்களில் போதிய
விளக்குகள் இல்லை. மேலும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த கோவை சாலை, ஆர்.டி.ஓ., அலுவலக சாலை உள்ளிட்ட இடங்களில் கூட, பெரும்பாலான விளக்குகள் அடிக்கடி எரிவதில்லை. இதனால், வேலை முடிந்து
வீட்டுக்கும் செல்லும் பெண்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, கரூர் மாநகராட்சி பகுதியில் எரி-யாத நிலையில் தெருக்களில் உள்ள விளக்குகளை பராமரிக்க நட-வடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள்
எதிர்பார்க்கின்-றனர்.