/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற விவசாய சங்கம் வேண்டுகோள்
/
கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற விவசாய சங்கம் வேண்டுகோள்
கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற விவசாய சங்கம் வேண்டுகோள்
கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற விவசாய சங்கம் வேண்டுகோள்
ADDED : ஆக 26, 2024 02:27 AM
கரூர்: கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர் சேமிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என, தமிழக அரசுக்கு, காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் மகாதானபுரம் ராஜாராம், வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் மழை மூலம், 34 ஆற்றுப்படுகைகளில், 833.40 ஆயிரம் மில்லியன் கன அடி நீர் கிடைப்பதாக கூறப்படுகிறது.
காவிரி உண்மை அறியும் குழுவினர், காவிரி படுகையில் கடந்த, 201 முதல், 224 ஆயிரம் மில்லியன் கன அடி நீர் கிடைப்பதாக கணித்துள்ளது. தமிழகத்தில், 50,000 ஏக்கருக்குள் பதிவு பெற்ற, 16,477 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளை சீரமைப்பு செய்து, நீர்வ-ரத்து ஓடைகளையும், சிறு கால்வாய்களையும் இணைத்து முழு தண்ணீரை கொண்டு வர வழிவகை செய்ய வேண்டும்.
தமிழகத்தில் பல ஆயிரம் ஏரிகள், ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது. ஏரிகளுக்கு நீரை எடுத்து செல்லும், கால்வாய்களின் தலைப்பு-களும், கட்டடங்கள் மூலம் அகலத்தை இழந்துள்ளது.
தமிழகம் நீர்மிகை மாநிலமாக இருந்தும், அண்டை மாநிலத்-திடம் நீருக்காக கையேந்தும் நிலையில் உள்ளோம். எனவே, கால்-வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர் சேமிப்பு நடவ-டிக்கையை, தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

