/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வாய்க்காலில் உள்ள புதர்களை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்
/
வாய்க்காலில் உள்ள புதர்களை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்
வாய்க்காலில் உள்ள புதர்களை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்
வாய்க்காலில் உள்ள புதர்களை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : ஆக 31, 2024 12:31 AM
கிருஷ்ணராயபுரம்: தீர்த்தம்பாளையம், பாசன வாய்க்காலில் செடிகள் வளர்ந்து புதர் காணப்படுவதால், விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.கிருஷ்ணராயபுரம் அடுத்த, தீர்த்தம்பாளையம் பஞ்., பகுதியில் அதிகளவு விவசாய பணிகள் நடந்து வருகிறது.
இங்குள்ள நிலங்களுக்கு பாசன வாய்க்கால் மூலம் தண்ணீர் செல்-கிறது. தற்போது பாசன வாய்க்காலில், அதிகமான நாணல் செடிகள் வளர்ந்து புதர் போல் இருப்பதால், வாய்க்காலில் தண்ணீர் செல்ல முடியாத நிலை
ஏற்பட்டுள்ளது. இதனால் நெல் சாகுபடி பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.எனவே, விளை நிலங்களுக்கு தண்ணீர் செல்லும் வகையில் பாசன வாய்க்காலில் வளர்ந்து வரும் புதர்களை அகற்ற, பஞ்சா-யத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.