எஸ்.சி., - எஸ்.டி., இளைஞர்களுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி
எஸ்.சி., - எஸ்.டி., இளைஞர்களுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி
ADDED : அக் 07, 2026 06:42 AM
கரூர்: எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு இளைஞர்களுக்கு, தாட்கோ சார்பில் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இது
குறித்து, கரூர் கலெக்டர் முத்துக்குமரன் வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பு: தாட்கோ மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கழகம்
இணைந்து, எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு பட்டதாரி இளைஞர்
களுக்கு, வேலைவாய்ப்புடன் கூடிய சிறப்பு பயிற்சிகளை வழங்க உள்ளன.
இதில்
சென்னையில், சாப்ட்வேர் டெவலப்பர், வெப் டிசைனர், அப்ளிகேஷன்
சாப்ட்வேர் டெவலப்பர், கோவையில் சாப்ட்வேர் டெவலப்பர், வெப் டிசைனர்,
அப்ளி
கேஷன் சாப்ட்வேர் டெவலப்பர், டேட்டா அனலிஸ்ட், மைக்ரோ பைனான்ஸ் எக்ஸி
கியூட்டிவ்,
இன்சூரன்ஸ் ஏஜென்ட், மதுரையில் டேட்டா அனலிஸ்ட், சாப்ட்வேர்
டெவலப்பர், மைக்ரோ பைனான்ஸ் எக்ஸிகியூட்டிவ், இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஆகிய
பயிற்சி வழங்கப்படும்.
சாப்ட்வேர் சார்ந்த பயிற்சிகளுக்கு பி.இ.,
பி.டெக்., அல்லது பி.எஸ்சி., கணினி அறிவியல் தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும். நிதி மற்றும் காப்பீடு சார்ந்த பயிற்சிகளுக்கு, பி.காம்.,
அல்லது பி.பி.ஏ., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 முதல் 35
வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு
வருமானம், 3 லட்சம் ரூபாய் இருக்க வேண்டும். பயிற்சியை முடிக்கும்
இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுவதோடு, முன்னணி நிறுவனங்கள்
மூலம் வேலைவாய்ப்பும் பெற்றுத் தரப்படும். www.tahdco.com என்ற இணைய
தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
