/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
விநாயகர் சதுர்த்தி: பூக்கள் வாழைத்தார் விலை உயர்வு
/
விநாயகர் சதுர்த்தி: பூக்கள் வாழைத்தார் விலை உயர்வு
விநாயகர் சதுர்த்தி: பூக்கள் வாழைத்தார் விலை உயர்வு
விநாயகர் சதுர்த்தி: பூக்கள் வாழைத்தார் விலை உயர்வு
ADDED : செப் 07, 2024 07:30 AM
கரூர்: விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி, பூக்கள் விலை மற்றும் வாழைத்தார் விலை உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் இன்று, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டா-டப்படுகிறது. இதனால், பூக்கள் மற்றும் வாழைத்தார் விலை உயர்ந்துள்ளது. கரூரில் கடந்த வாரம் ஒரு கிலோ மல்லிகை பூ, 500 ரூபாய் வரை விற்றது. நேற்று கரூர் பூ மார்க்கெட்டில் மல்-லிகை கிலோ, 900 ரூபாயை தொட்டது.
அதேபோல் முல்லை ஒரு கிலோ, 500 ரூபாயில் இருந்து, 600 ரூபாய்க்கும், ஜாதி மல்லி, 400 ரூபாயில் இருந்து, 500 ரூபாய், பெரிய ரோஜா, 200 ரூபாயில் இருந்து, 300 ரூபாய், அரளி, 120 ரூபாயில் இருந்து, 150 ரூபாய், மரிக்கொழுந்து, துளசி ஒரு கட்டு, 15 ரூபாயில் இருந்து, 25 ரூபாய், சம்பங்கி, 200 ரூபாயில் இருந்து, 300 ரூபாய், சாமந்தி, 100 ரூபாயில் இருந்து, 150 ரூபாய்க்கு விற்றது.மேலும் பூவன் வாழைத்தார், 400 ரூபாயில் இருந்து, 600 ரூபாய்க்கும், ரஸ்தாளி, 350 ரூபாயில் இருந்து, 500 ரூபாய்க்கும், கற்பூரவள்ளி, 300 ரூபாயில் இருந்து, 400 ரூபாய்க்கு நேற்று விலை அதிகரித்தது. அதேபோல் ஒரு கிலோ ஆப்பிள், 140, சாத்-துக்குடி, 60, மாதுளை, 160, சப்போட்டா, 30 ரூபாய்க்கு விற்றது. கரூர் ஜவஹர் பஜார், கோவை சாலை, உழவர் சந்தை, சுங்ககேட் பகுதிகளில், வீட்டில் வைத்து வணங்கப்படும் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள், 100 ரூபாய் முதல், 500 ரூபாய் வரை விற்-றது.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, இன்றும், நாளையும் பொதுவான விடுமுறை நாள் என்பதாலும், நேற்று வெளியூர்க-ளுக்கு செல்ல, கரூர் பஸ் ஸ்டாண்டில் நேற்று காலை, பொது-மக்கள் குவிந்தனர்.