/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வரத்து குறைவால் கொய்யா பழம் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
/
வரத்து குறைவால் கொய்யா பழம் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
வரத்து குறைவால் கொய்யா பழம் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
வரத்து குறைவால் கொய்யா பழம் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : செப் 10, 2024 05:25 AM
கரூர்: வரத்து குறைவால், கொய்யா பழம் விலை உயர்ந்துள்ளது.தமிழகத்தில் கொய்யா பழம் உற்பத்தியில், திண்டுக்கல் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. அதில், பழநி, ஆயக்குடி, சட்-டப்பாறை, வரதாபட்டினம், கணக்கன்பட்டி, அமரபூண்டி உள்பட, 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் கொய்யா பழம் சாகுபடி செய்-யப்படுகிறது. அந்த பகுதி யில், அறுவடை செய்யப்பட்ட கொய்-யாபழம், ஆயக்குடி சந்தை க்கு நாள்தோறும், 200 டன் வரை வந்தது. அங்கிருந்து கேரளா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்க-ளுக்கும் அனுப்பப்படுகிறது.
கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை, கொய்யா பழம் தேவைக்கு திண்டுக்கல் மாவட்டத்தை நம்பியிருக்க வேண்டிய நிலை உள்-ளது. கடந்த மாதம் ஒரு கிலோ கொய்யா பழம், 30 ரூபாய் வரை விற்றது. இந்நிலையில் பருவநிலை
மாற்றம், திடீர் மழை, அதீத வெயில் ஆகிய காரணங்களால் கொய்யா பழம், ஆயக்குடி சந்-தைக்கு வரத்து குறைந்துள்ளது. இதனால், விலை உயர்ந்துள்ளது.கரூர், வெங்கமேடு உழவர் சந்தையில் நேற்று ஒரு கிலோ கொய்யா பழம், 35 முதல், 45 ரூபாய் வரை விற்றது. வெளிமார்க்-கெட்டில், 50 முதல், 60 ரூபாய் வரை விற்றது. விலை உயர்வால், விவசாயிகள்
மகிழ்ச்சியடைந்துள்ளனர்.