ADDED : ஆக 31, 2024 12:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவக்குறிச்சி: சின்னதாராபுரம் அருகே சின்னதிருமங்கலத்தை சேர்ந்தவர் நல்ல-சிவம், 53. இவர், மயிலாடுதுறை மாவட்டம் காசுக்கரை வீதி பகு-தியில் வசித்து வருகிறார். இவரது நண்பர் க.பரமத்தி மேற்கு தோட்டத்தை சேர்ந்த குணசேகரன், 69,
இவரை பார்ப்பதற்காக நேற்று நல்லசிவம், கரூர் - கோவை சாலையில் தனது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் க.பரமத்தி அருகே சென்றபோது, எதிர் திசையில் கோவை மாவட்டம் மயிலம்பட்டி ராஜீவ்
காந்தி நகரை சேர்ந்த சுதாகர், 42, என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார், டூவீலர் மீது மோதியது. இந்த விபத்தில் நல்ல சிவத்-திற்கு பலத்த காயம் ஏற்பட்டதால், கோவையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதித்தனர்.க.பரமத்தி போலீசார் விசாரித்து வருகின்றனர்.