/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அமராவதி அணையில் இருந்து ஆற்றில் நீர் திறப்பு குறைப்பு
/
அமராவதி அணையில் இருந்து ஆற்றில் நீர் திறப்பு குறைப்பு
அமராவதி அணையில் இருந்து ஆற்றில் நீர் திறப்பு குறைப்பு
அமராவதி அணையில் இருந்து ஆற்றில் நீர் திறப்பு குறைப்பு
ADDED : ஜூலை 22, 2024 08:45 AM
கரூர் : அமராவதி அணையில் இருந்து, ஆற்றில் திறக்-கப்பட்ட தண்ணீர், நேற்று மதியம் குறைக்கப்பட்-டது.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமரா-வதி அணையில் இருந்து கடந்த, 18 முதல் ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதிகபட்-சமாக வினாடிக்கு, 4,500 கன அடி தண்ணீர் திறக்-கப்பட்டது. ஆனால், கேரளா உள்ளிட்ட, நீர்பிடிப்பு பகுதியில் போதிய மழை இல்லாததால், அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது. இதனால், ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் படிப்ப-டியாக குறைக்கப்பட்டது. நேற்று மதியம், 12:00 மணி நிலவரப்படி ஆற்றில் திறக்கப்பட்ட தண்-ணீரின் அளவு வினாடிக்கு, 1,100 கன அடியாக குறைக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில், தற்காலிகமாக தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்-ளது. அமராவதி அணைக்கு வினாடிக்கு, நேற்று மதியம், 12:00 மணி நிலவரப்படி, 1,850 கன அடி தண்ணீர் வந்தது. 90 அடி கொண்ட அணை நீர்-மட்டம், 88.39 அடியாக இருந்தது.