ADDED : செப் 11, 2024 06:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அடுத்த, காவல்காரன்பட்டி மின் வாரியம் அருகில் குடியிருப்பில் உள்ள மின்கம்பத்தின் அடி பகுதி மற்றும் மேல் பகுதி எலும்பு கூடு போல் காட்சி தருகிறது.
இப்பகுதி மக்கள் மின் வாரியத்தில் புகார் தெரிவித்தும், எந்த விதமான நடவடிக்-கையும் எடுக்க முன்வராமல் உள்ளனர். கம்பம் விழுவதற்கு முன், பொது மக்கள் நலன் கருதி மின் கம்பத்தை மாற்றி விட்டு, புதிய மின் கம்பம் நடவேண்டும் என, பொது மக்கள் எதிர்பார்க்கின்-றனர்.

