/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கதவணை அருகில் குளித்த இளைஞர் இறந்த நிலையில் வாய்க்காலில் மீட்பு
/
கதவணை அருகில் குளித்த இளைஞர் இறந்த நிலையில் வாய்க்காலில் மீட்பு
கதவணை அருகில் குளித்த இளைஞர் இறந்த நிலையில் வாய்க்காலில் மீட்பு
கதவணை அருகில் குளித்த இளைஞர் இறந்த நிலையில் வாய்க்காலில் மீட்பு
ADDED : ஜூலை 24, 2024 12:24 AM
கிருஷ்ணராயபுரம் : மாயனுார், கதவணை அருகில் குளித்த இளைஞர் ஒருவர் மாய-மான நிலையில், நேற்று இறந்த நிலையில் அவரது உடல் வாய்க்-காலில் மீட்கப்பட்டது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, உள்வீரராக்கியத்தை சேர்ந்தவர் ராகவா ஆனந்த், 24. இவரது நண்பர்கள் முருகானந்தம், தீபக் ஆகிய மூன்று பேரும் நேற்று முன்தினம் மதியம் மாயனுார் காவிரி ஆறு கதவணை அருகில் குளித்தனர். அப்போது முருகா-னந்தம், தீபக் ஆகியோர் குளித்து விட்டு காவிரி ஆற்றில் இருந்து வெளியே வந்து பார்த்த போது, ராகவா ஆனந்த் மாயமானது
தெரியவந்தது. இது குறித்து மாயனுார் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
அதன்படி கரூர் தீயணைப்பு துறை வீரர்கள், கடந்த இரண்டு நாட்-களாக காவிரி ஆற்றில் பல இடங்களில் தேடியும் ராகவா ஆனந்தை கண்டுபிடிப்பதில் சவாலாக இருந்தது. இந்நிலையில் நேற்று காலை மீண்டும் தேடிய நிலையில், ஆற்றின் அருகில் செல்லும் வாய்க்காலில் இறந்த நிலையில் ராகவா ஆனந்த் உடல் மீட்கப்பட்டது. அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்-தனர். மாயனுார் போலீசார்
விசாரித்து வருகின்றனர்.

