/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கம்
/
வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கம்
ADDED : ஆக 14, 2024 02:27 AM
கரூர்: தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வாஸ்கோடகாமா - வேளாங்கண்ணி சிறப்பு ரயில் (எண்: 07361) வரும், 27, செப்., 2, 6ல் வாஸ்கோடகாமாவில் இருந்து இரவு, 9:55 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை, 1:30 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும். இந்த ரயில் வரும், 28, செப்., 3, 7ல் மாலை, 6:58 மணிக்கு கரூர் வந்து, இரவு, 7:00 மணிக்கு வேளாங்கண்ணிக்கு புறப்பட்டு செல்லும்.
மறுமார்க்கத்தில், வேளாங்கண்ணி - வாஸ்கோடகாமா சிறப்பு ரயில் (எண்: 07362) வேளாங்கண்ணியில் இருந்து வரும், 29, செப்., 4, 8ல் காலை, 11:55 மணிக்கு புறப்பட்டு அதிகாலை, 12:15 மணிக்கு வாஸ்கோடகாமா சென்றடையும். இந்த ரயில் கரூருக்கு வரும், 30, செப்., 5, 9ல் மதியம், 4:23 மணிக்கு வந்து, 4:25 மணிக்கு, வாஸ்கோடகாமா புறப்பட்டு செல்லும்.