/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பூங்காவில் நுழைய காதல் ஜோடிக்கு தடை கரூர் மாநகராட்சி நிர்வாகம் அதிரடி
/
பூங்காவில் நுழைய காதல் ஜோடிக்கு தடை கரூர் மாநகராட்சி நிர்வாகம் அதிரடி
பூங்காவில் நுழைய காதல் ஜோடிக்கு தடை கரூர் மாநகராட்சி நிர்வாகம் அதிரடி
பூங்காவில் நுழைய காதல் ஜோடிக்கு தடை கரூர் மாநகராட்சி நிர்வாகம் அதிரடி
ADDED : ஆக 24, 2024 01:12 AM
கரூர், ஆக. 24-
கரூரில் பூங்காவில், காதலர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான ஆசாத் பூங்கா, டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு அருகில் உள்ளது. கடந்த, 2016-21ல், அ.தி.மு.க., ஆட்சியில் பூங்கா, பல லட்ச ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. கரூர் மாநகராட்சி சார்பில், பூங்கா காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, திறந்து வைக்கப்படுகிறது. கரூர் மாநகராட்சி பகுதியில், வேறு பூங்கா இல்லாததால், பொதுமக்கள் குழந்தைகளுடன், ஆசாத் பூங்காவுக்கு மாலை மற்றும் விடுமுறை நாட்களில் வருகின்றனர்.
இந்நிலையில், காதல் ஜோடி என்ற போர்வையில், சிலர் ஆசாத் பூங்காவில் அமர்ந்து கொண்டு, அத்துமீறுவதாக புகார் எழுந்தது. மேலும், மது பிரியர்கள் பூங்காவில் படுத்து கொண்டு, குறிப்பிட்ட நேரத்தில் எழுந்து செல்லாமல், மது மயக்கத்தில் நீண்ட நேரம் உறங்குகின்றனர். இதனால், கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள, ஆசாத் பூங்காவில் காதல் ஜோடிகள், மது பிரியர்கள் மற்றும் துாங்குபவர்கள் பூங்காவுக்குள் நுழையக் கூடாது, மீறி நடந்தால் காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகராட்சி சார்பில் பூங்கா நுழைவு வாயிலில் பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால், அத்துமீறும் காதல் ஜோடிகள், மது பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.