நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொழிலாளி கைது
குளித்தலை:குளித்தலை அடுத்த, கிருஷ்ணராயபுரம் கிழக்கு காலனியில், நேற்று முன்தினம் கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்துக்கு சொந்தமான இடத்தில், பொது கழிப்பிடம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் டவுன் பஞ்., அலுவலர்கள், பணியாளர்கள் வருவாய்த்துறையினர், ஊர் மக்கள் பங்கேற்றனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த இளையராஜா, 43, என்ற விவசாய கூலி தொழிலாளியால் பிரச்னை ஏற்படும் என கருதி, மாயனுார் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரை கைது செய்தனர். பின்னர்,
மாலையில் விடுவித்தனர்.