sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ அரவக்குறிச்சியில் நிழற்கூடம்பொதுமக்கள் எதிர்பார்ப்பு

அரவக்குறிச்சியில் நிழற்கூடம்பொதுமக்கள் எதிர்பார்ப்பு

அரவக்குறிச்சியில் நிழற்கூடம்பொதுமக்கள் எதிர்பார்ப்பு


ADDED : மார் 23, 2025 12:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 23, 2025 12:59 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அரவக்குறிச்சியில் நிழற்கூடம்பொதுமக்கள் எதிர்பார்ப்பு

அரவக்குறிச்சி:அரவக்குறிச்சியில், வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க, பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படுமா என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அரவக்குறிச்சியில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. அரவக்குறிச்சியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம், தாலுகா அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், உதவி தொடக்கக் கல்வி அலுவலகம், அரசு கருவூலம், காவல் நிலையம், துணை கண்காணிப்பாளர் அலுவலகம், தீயணைப்பு நிலையம், வட்டார போக்குவரத்து என அரசு சார்ந்த அலுவலகங்கள், வங்கிகள் செயல்படுகின்றன.

ஆனால், அரவக்குறிச்சியில் பஸ் ஸ்டாண்ட் இல்லாததால் அரசு அலுவலர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏவிஎம் கார்னர் மற்றும் காந்தி சிலை பஸ் நிறுத்தம் பகுதியில் பஸ்சுக்காக மழையிலும், வெயிலிலும் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

பஸ் ஸ்டாண்ட்தான் இல்லையென்றால், பயணிகள் நிழற்கூட வசதியும் செய்து தரவில்லை என்பது மிகவும் வேதனைக்குரிய விஷயம். காந்தி சிலை அருகே உள்ள நிழற்கூடம், மது பிரியர்களின் கூடாரமாக மாறிவிட்டது.

தேர்தல் நேரத்தில், கட்சிகளின் வாக்குறுதிகளில் அரவக்குறிச்சி பஸ் ஸ்டாண்டும் இடம் பெற்று வருகிறது.

ஆனால் செயல்பாட்டுக்கு இதுவரை வரவில்லை. கடுமையான வெப்பம் நிலவி வரும் இந்த நிலையில், குறைந்தபட்சம் பயணிகள் தங்க நிழற்கூட வசதியை செய்து தர மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us