/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நிலக்கடலை அறுவடைபணியில் விவசாயிகள்
/
நிலக்கடலை அறுவடைபணியில் விவசாயிகள்
ADDED : ஏப் 02, 2025 01:41 AM
நிலக்கடலை அறுவடைபணியில் விவசாயிகள்
கிருஷ்ணராயபுரம்,:கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில், நிலக்கடலை அறுவடை பணிகளில் விவசாய கூலி தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட புனவாசிப்பட்டி, மலையாண்டிப்பட்டி, வரகூர், குழந்தைப்பட்டி, கணக்கம்பட்டி, சரவணபுரம், மேட்டுப்பட்டி, தேசிய மங்களம், பஞ்சப்பட்டி, வடுகப்பட்டி, திருமேனியூர் ஆகிய பகுதிகளில் நிலக்கடலை சாகுபடி செய்துள்ளனர். செடிகளுக்கு கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்
படுகிறது. தற்போது செடிகளில் கடலை விளைச்சல் கண்டுள்ளது. இவற்றை விவசாய கூலி தொழிலாளர்கள், அறுவடை செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நிலக்கடலை வெயிலில் உலர்த்தப்பட்ட பின், கரூர், திருச்சி ஆகிய பகுதிகளில் செயல்படும்
கமிஷன் மண்டிகளில் வைத்து விற்கப்படுகிறது.

