தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மீனவர் சங்கம் வேண்டுகோள்

மீனவர் சங்கம் வேண்டுகோள்

மீனவர் சங்கம் வேண்டுகோள்


ADDED : ஏப் 08, 2025 01:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 08, 2025 01:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மீனவர் சங்கம் வேண்டுகோள்

கரூர்:காவிரி - குண்டாறு திட்டத்தின் கீழ், வாய்க்கால் ஓரமாக சாய்தளம் அமைக்கக் கூடாது என, குளித்தலை உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கம் சார்பில், கரூர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

அதில், கூறியிருப்பதாவது:குளித்தலை வட்ட உள்நாட்டு மீனவர் சங்கம் சார்பில், 1,000 குடும்பத்திற்கு மேற்பட்டோர் காவிரி ஆற்றில் மீன் பிடித்து, மாயனுார் காவிரி ஆற்றில் கட்டப்பட்டுள்ள கதவணை அடுத்து, தென்கரை வாய்க்கால் அருகில் மார்க்கெட் அமைத்து, மீன்களை விற்பனை செய்து வருகிறோம். மார்க்கெட்டில் உயிர் மீன்கள் விற்பதால் கரூர், திருச்சி மாவட்டங்களில் இருந்து ஏராளமான வாடிக்கையாளர்கள் மீன்களை வாங்கி செல்கின்றனர். இந்த மார்க்கெட் தான், எங்களது வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.

தற்போது காவிரி குண்டாறு திட்டத்தின் கீழ், நாங்கள் விற்பனை செய்யும் இடத்தில் வாய்க்கால் ஓரமாக சாய்தளம் கட்டப்பட்டு வருகிறது. சாய்வாக கட்டி விட்டால், மீன்களை வாய்க்காலில் இறங்கி சுத்தம் செய்ய முடியாது. மீன்களை உயிருடன் விற்பனை செய்ய முடியாது. உயிர் மீன்கள் விற்பனை இல்லை என்றால், இங்கு யாரும் மீன் வாங்க வர மாட்டார்கள். வாய்க்கால் கரையோரம் ஐந்து இடங்களில், படித்துறை அமைத்து தர வேண்டும். இந்த பகுதிக்கு தண்ணீர் வசதியுடன் கூடிய மீன் விற்பனை நிலையத்தை, அரசு நிரந்தரமாக அமைத்து தர வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us