தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கல்யாண பசுபதீஸ்வரருக்குதிருக்கல்யாண உற்சவம்

கல்யாண பசுபதீஸ்வரருக்குதிருக்கல்யாண உற்சவம்

கல்யாண பசுபதீஸ்வரருக்குதிருக்கல்யாண உற்சவம்


ADDED : ஏப் 10, 2025 01:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 10, 2025 01:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கல்யாண பசுபதீஸ்வரருக்குதிருக்கல்யாண உற்சவம்

கரூர்:கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

பிரசித்தி பெற்ற, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் கடந்த, 3ல் கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர விழா தொடங்கியது. அதை தொடர்ந்து, பல்வேறு சிறப்பு வாகனங்களில், உற்சவர் திருவீதி உலா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு சுவாமி, அம்பாள் எழுந்தருளல் நிகழ்ச்சி மற்றும் சிறப்பு அபிேஷகம் நடந்தது.

நேற்று காலை அலங்கார நாயகி, சவுந்திரவள்ளி உடனாகிய பசுபதீஸ்வரருக்கு, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அப்போது, ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.

நாளை தேரோட்டம், வரும், 12ல் தீர்த்தவாரி, 13ல் ஆளும் பல்லாக்கு, 14ல் ஊஞ்சல் உற்சவம், 15ல் வெள்ளி வாகனத்தில், உற்சவர் திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us