/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கொ.ம.தே.க., சார்பில்ரத்ததான முகாம்
/
கொ.ம.தே.க., சார்பில்ரத்ததான முகாம்
ADDED : ஏப் 16, 2025 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொ.ம.தே.க., சார்பில்ரத்ததான முகாம்
கரூர்:கரூர் மாவட்ட கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி இளைஞர் அணி சார்பில், சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த நாளையொட்டி, கரூரில் ரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாநில இளைஞர் அணி செயலாளர் சூர்யமூர்த்தி முகாமை தொடங்கி வைத்தார். பலர் ரத்ததானம் அளித்தனர். தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாநில துணை பொதுச்செயலாளர் நடராஜன், வர்த்தகர் அணி செயலாளர் விசா சண்முகம், மாவட்ட செயலாளர் மூர்த்தி, இளைஞர் அணி நிர்வாகிகள் ரஞ்சித், சதீஷ் உள்பட பலர்
பங்கேற்றனர்.