/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பயங்கரவாதிகள் தாக்குதலில்உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
/
பயங்கரவாதிகள் தாக்குதலில்உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
பயங்கரவாதிகள் தாக்குதலில்உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
பயங்கரவாதிகள் தாக்குதலில்உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
ADDED : ஏப் 25, 2025 01:24 AM
கரூர்:
காஷ்மீரில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு, அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, கரூர் பா.ஜ., மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடந்தது.
மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், 26 பேர் பலியாயினர். மேலும் சிலர் காயமடைந்தனர். இதில், இறந்தவர்களுக்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், மகளிரணி மாநில துணைத்தலைவர் மீனா வினோத்குமார், மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஆறுமுகம், சக்திவேல் முருகன், மாவட்ட பொருளாளர் குணசேகரன், மாவட்ட துணைத் தலைவர் சுப்பிரமணி உட்பட பலர் பங்கேற்றனர்.