ADDED : மே 15, 2026 05:59 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம்::லாலாப்பேட்டை மண்டியில், வாழைத்தார்கள் விற்பனை செய்யப்பட்டது.கிருஷ்ணராயபுரம் அடுத்த கருப்பத்துார், கள்ளப்பள்ளி, பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, மகாதானபுரம், பொய்கைப்புத்துார் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்து வருகின்றனர்.
வாழைத்தார்கள் அறுவடை செய்து, லாலாப்பேட்டை கமிஷன் மண்டிக்கு கொண்டு வந்து விற்று வருகின்றனர். இதில் ரஸ்தாளி வாழைத்தார், 350 ரூபாய், கற்பூரவள்ளி வாழைத்தார், 200 ரூபாய், பூவன் வாழைத்தார், 300 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வாழைத்தார்களை உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் வாங்கி சென்றனர்.
