ADDED : மே 16, 2026 05:18 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டை, கிருஷ்ணராயபுரம், வல்லம், கொம்பாடிப்பட்டி, வேங்காம்பட்டி, வரகூர், வயலுார், பழையஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
தொடர்ந்து நண்பகல் நேரத்தில் லேசான சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் சாரல் மழை காரணமாக, கோடை உழவு பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
