ADDED : மே 17, 2026 05:00 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம்: மகாதானபுரம், பிள்ளபாளையம் பஞ்சாயத்துகளில் பணிபுரியும், 100 நாள் திட்ட தொழிலாளர்களுக்கு கருவிழித்திரை ஸ்கேன் செய்வதை ரத்து செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கான கூலியை முழுமையாக வழங்க வலியுறுத்தி, அந்தந்த பஞ்சாயத்து அலுவலகம் முன், மத்திய அரசை கண்டித்து, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஒன்றிய தலைவர்கள் தர்மராஜ், பழனியாண்டி, மாவட்ட தலைவர் கண்ணதாசன் மற்றும் 100 நாள் திட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
