ADDED : மே 19, 2026 01:50 AM
அ நிறம் | அளவு
கரூர்:கரூர்
மாவட்ட அனைத்து தொழிற்சங்கம் சார்பில், மாவட்ட சி.ஐ.டி.யு., செயலாளர்
சுப்பிரமணி தலைமையில், தலைமை தபால் நிலையம் முன்,
ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய
மத்திய பா.ஜ., அரசை கண்டித்தும், பொதுமக்களுக்கு நேரடியாக பாதிப்பை
ஏற்படுத்தும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை ரத்து செய்யக்கோரியும்
கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், தொழிற்சங்க நிர்வாகிகள்
வடிவேலன், சுடர்வளவன் உள்பட, பலர் பங்கேற்றனர்.
