/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பிளஸ் 1 தேர்வு தொடக்கம்10,457 மாணவர்கள் பங்கேற்பு
/
பிளஸ் 1 தேர்வு தொடக்கம்10,457 மாணவர்கள் பங்கேற்பு
ADDED : மார் 06, 2025 01:24 AM
பிளஸ் 1 தேர்வு தொடக்கம்10,457 மாணவர்கள் பங்கேற்பு
கரூர்:-கரூர் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில், 10,457 மாணவ, மாணவியர் தேர்வெழுதினர்.தமிழகத்தில், பிளஸ்- 2 வகுப்பு மாணவ, -மாணயருக்கான பொதுத் தேர்வு நடந்து வருகிறது. தொடர்ந்து, பிளஸ் -1 வகுப்புக்கான பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. கரூர் மாவட்டத்தில், 45 மையங்களில் தேர்வு நடந்தது. இதில், 10,526 மாணவ, மாணவியரும், தனி தேர்வர்கள், 187 பேர் என மொத்தம், 10,713 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். அதில், 10,347 பேர், தனி தேர்வர்கள், 110 பேர் என மொத்தம், 10,457 பேர் தேர்வு எழுதினர். 256 பேர் தேர்வு எழுத வரவில்லை. தமிழ் உள்பட இதர மொழி பாடங்களுக்கான தேர்வு நேற்று நடந்தது. காலை, 10:00 மணி முதல் பிற்பகல், 1:15 மணி வரை தேர்வு நடந்தது. நேற்று தொடங்கிய தேர்வு வரும், 27 வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு தேர்வுக்கும், 2 முதல், 4 நாட்கள் வரை இடைவெளி விட்டு நடக்கிறது.
தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் மையங்களுக்கு வந்து செல்ல, பஸ் வசதி செய்யப்பட்டிருந்தது. தேர்வில் முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க, பள்ளிக்கல்வித்துறை சார்பில் நிலையான படையினர் மற்றும் பறக்கும் படையினர், 112 பேர் நியமனம் செய்யப்பட்டிருந்தனர்.