தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ 100 கர்ப்பிணிகளுக்குசமுதாய வளைகாப்பு

100 கர்ப்பிணிகளுக்குசமுதாய வளைகாப்பு

100 கர்ப்பிணிகளுக்குசமுதாய வளைகாப்பு


ADDED : மார் 13, 2025 02:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2025 02:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

100 கர்ப்பிணிகளுக்குசமுதாய வளைகாப்பு

குளித்தலை:குளித்தலையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் வினோதினி தலைமை வகித்தார். குளித்தலை நகராட்சி தலைவர் சகுந்தலா, ஒன்றிய தி.மு.க., செயலர் தியாகராஜன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். அரசின் திட்டங்கள் குறித்து, எம்.எல்.ஏ., மாணிக்கம் பேசினார். விழாவில், 100 கர்ப்பிணிகளுக்கு மஞ்சள், குங்குமம் தடவி கையில் வளையல் போட்டு கர்ப்பிணிகள் தங்களது குழந்தைகளை வளர்த்தல், உணவு பழக்கவழக்கங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. விழாவில் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. ஊட்டச்சத்து அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us