தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூரில் குறைதீர் கூட்டம்519 மனுக்கள் குவிப்பு

கரூரில் குறைதீர் கூட்டம்519 மனுக்கள் குவிப்பு

கரூரில் குறைதீர் கூட்டம்519 மனுக்கள் குவிப்பு


ADDED : ஏப் 08, 2025 01:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 08, 2025 01:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூரில் குறைதீர் கூட்டம்519 மனுக்கள் குவிப்பு

கரூர்:கரூர் கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடந்தது. இதில், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, வங்கி கடன்கள், பட்டா மாறுதல், ஜாதி சான்று, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் கேட்டு மக்களிடம் இருந்து, 519 மனுக்கள் வரப்பெற்றன. உரிய நடவடிக்கை மேற்கொள்ள, தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 10 பயனாளிகளுக்கு காதொலி கருவி, ஊன்றுகோல், பிரைய்லி கை கடிகாரம், ஸ்டிக், கருப்பு கண்ணாடி மற்றும் மடக்கு குச்சி என மொத்தம், 20 ஆயிரத்து, 931 ரூபாய் -மதிப்பிலான உதவி உபகரணங்களையும், வருவாய்த்துறை சார்பாக ஒரு பயனாளிக்கு இலவச வீட்டுமனை பட்டாவையும் கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில் டி.ஆர்.ஓ., கண்ணன், சப்-கலெக்டர் பிரகாசம், மாவட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் இளங்கோ, உதவி ஆணையர் (கலால்) கருணாகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us