/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரவக்குறிச்சி அருகே வேன் கவிழ்ந்து 6 பேர் படுகாயம்
/
அரவக்குறிச்சி அருகே வேன் கவிழ்ந்து 6 பேர் படுகாயம்
அரவக்குறிச்சி அருகே வேன் கவிழ்ந்து 6 பேர் படுகாயம்
அரவக்குறிச்சி அருகே வேன் கவிழ்ந்து 6 பேர் படுகாயம்
ADDED : ஜூலை 06, 2024 12:16 AM
அரவக்குறிச்சி : அரவக்குறிச்சி அருகே, வேன் கவிழ்ந்து ஆறு பேர் படுகாயம் அடைந்தனர்.
திருப்பூர் மாவட்டம், குழுமம் குளத்துப்பாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன் மகன் குகன், 27. வேன் ஓட்டுனராக உள்ளார். குகன் தனது வாகனத்தில், மடத்துக்குளம் கணியூரை சேர்ந்த ஜீவா, 32, மொட்டையப்பன், 36, பார்த்திபன், 33, கிருஷ்ணன், 32, செந்தில்குமார், 38, ஆகிய 5 பேரையும் ஏற்றிக்கொண்டு நேற்று திண்டுக்கல்லில் இருந்து, கரூர் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
சீத்தப்பட்டி காலனி பகுதியில் வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஜீவா, மொட்டை-யப்பன், பார்த்திபன், கிருஷ்ணன், செந்தில்குமார் மற்றும் குகன் ஆகிய ஆறு பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இவர்களை மீட்டு, கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வரு-கின்றனர்.