தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூர் மாவட்டத்தில் 6,051 மெ.டன் ரசாயன உரங்கள் இருப்பு வைப்பு

கரூர் மாவட்டத்தில் 6,051 மெ.டன் ரசாயன உரங்கள் இருப்பு வைப்பு

கரூர் மாவட்டத்தில் 6,051 மெ.டன் ரசாயன உரங்கள் இருப்பு வைப்பு


ADDED : மார் 22, 2025 01:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 22, 2025 01:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர் மாவட்டத்தில் 6,051 மெ.டன் ரசாயன உரங்கள் இருப்பு வைப்பு

கரூர்:'' கோடை காலங்களில், கால்நடைகளின் தீவன தேவைகளை பூர்த்தி செய்ய, பசுந்தீவன உற்பத்தியை மேற்கொள்ளலாம்,'' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.

கரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. அதில், விவசாயிகள் தரப்பில் இருந்து எழுப்பப்பட்ட, பல்வேறு கேள்விகளுக்கு அரசு துறை அதிகாரிகள் பதில் அளித்தனர்.

பிறகு, கலெக்டர் தங்கவேல் பேசியதாவது:கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் போதுமான அளவில், 6,051 மெட்ரிக் டன் ரசாயன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. நெல் பயிர் சாகுபடிக்காக, 125 மெட்ரிக் டன் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அதேபோல், சிறுதானிய விதைகள், 13 மெட்ரிக் டன் இருப்பில் உள்ளது. எண்ணெய் வித்துக்கள், 12.479 மெட்ரிக் டன் இருப்பில் உள்ளது. கரூர் மாவட்டத்தில் நடப்பு மார்ச் மாதம் இயல்பான மழையளவு, 32.30 மி.மீ., ஆனால் இதுவரை, 29.98 மி.மீ., மழை பெய்துள்ளது.

கோடை காலங்களில், கால்நடைகளின் தீவன தேவைகளை பூர்த்தி செய்ய, மண்ணில்லா நீரியல் பசுந்தீவன உற்பத்தியை மேற்கொள்ளலாம். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு, 10 முதல், 15 நாட்களுக்குள் அஞ்சல் மூலம் பதில் அளிக்க அதிகாரிகள் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், டி.ஆர்.ஓ., கண்ணன், உதவி கலெக்டர் சுவாதி, வேளாண்மை துறை இணை இயக்குனர் சிவானந்தம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா, கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் சாந்தி, ஆர்.டி.ஓ., முகமது பைசல் மற்றும் பலர்

பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us