தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மார்ச் 8 முதல் பறவைகளைகணக்கெடுக்கும் பணி துவக்கம்

மார்ச் 8 முதல் பறவைகளைகணக்கெடுக்கும் பணி துவக்கம்

மார்ச் 8 முதல் பறவைகளைகணக்கெடுக்கும் பணி துவக்கம்


ADDED : மார் 06, 2025 01:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2025 01:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மார்ச் 8 முதல் பறவைகளைகணக்கெடுக்கும் பணி துவக்கம்

கரூர்:-கரூர் மாவட்டத்தில் வரும், 8 முதல், பறவைகளை கணக்கெடுக்கும் பணி நடக்கிறது.தமிழகம் முழுவதும், ஒவ்வொரு ஆண்டும் ஈரநிலங்கள் மற்றும் நிலப்பரப்புகளில் வாழும், பறவைகளை கணக்கெடுக்கும் பணி நடத்தப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் வனத்துறை சார்பில் வரும் 8, 9 மற்றும் 15, 16 ஆகிய நாட்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடத்தப்படுகிறது. இங்குள்ள பல்வேறு வனப்பகுதிகள், நீர்நிலைகள் மற்றும் இதர இடங்களில் காணப்படும் பறவைகளின் எண்ணிக்கை, வகைகள், அவற்றின் வாழ்வாதாரத்தை பற்றிய தரவுகளை சேகரிக்கும் வகையில், பறவைகளின் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

இதில், பறவை வல்லுனர்கள், உயிரியில் மற்றும் விலங்கியல் வல்லுனர்கள், கல்லுாரி மாணவர்கள், தன்னார்வலர்கள் பறவைகள் கணக்கெடுப்பில் கலந்து கொள்ளலாம். பிற மாவட்டங்களில் உள்ள பறவை வல்லுனர்களும் பங்கேற்கலாம்.

பறவைகள் கணக்கெடுப்புக்கான நிகழ்ச்சியில், பங்கேற்பவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். மேலும், வனச்சரக அலுவலர்கள் முரளிதரனை, 9176768768, கனகராஜை, 9788578344 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இத்தகவலை, கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us