ADDED : ஆக 13, 2024 06:10 AM
கரூர்: கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்-தது.
கலெக்டர் தங்கவேல் தலைமையில் மாணவர்கள் உறுதிமொ-ழியை ஏற்றுக்கொண்டனர். முன்னதாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில், 300க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பிரசார பேரணியை தொடங்கி வைத்தார்.
மாநகராட்சி மேயர் கவிதா, கரூர் எஸ்.பி., பிரபாகர், மாநக-ராட்சி கமிஷனர் சுதா, கலால் துறை உதவி ஆணையர் கருணா-கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
* வேலாயுதம்பாளையத்தில், புகளூர் வட்ட வருவாய் துறை சார்பில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடந்தது. தாசில்தார் தனசேகரன் தலைமை வகித்தார். சப்-கலெக்டர் கலெக்டர் பிரகாஷ் பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
வேலாயுதம்பாளையம் பைபாஸ் மேம்பாலம் அருகே தொடங்-கிய பேரணி உழவர் சந்தை, மலை வீதி ரவுண்டானா வழியாக சென்று மீண்டும் பைபாஸ் நால்ரோடு வந்தடைந்தது. கல்லுாரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு, போதை பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திசென்றனர்.
வேலாயுதம்பாளையம் இன்ஸ்பெக்டர் ஜெகநாத், மண்டல துணை தாசில்தார் சுதா உள்பட பலர் பங்கேற்றனர்.

