/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பூவன் வாழைத்தார் ரூ.300க்கு விற்பனை
/
பூவன் வாழைத்தார் ரூ.300க்கு விற்பனை
ADDED : ஆக 26, 2024 02:26 AM
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம், வல்லம், கொம்பா-டிப்பட்டி, வீரவள்ளி, வீரகுமாரன்பட்டி, கருப்பத்துார், கள்ளப்-பள்ளி, மகாதானபுரம், பொய்கைப்புத்துார் ஆகிய இடங்களில், விவசாயிகள் விளை நிலங்களில் வாழை சாகுபடி செய்து வருகின்-றனர். தற்போது, காவிரி ஆறுகளில் தண்ணீர் செல்வதால், மாய-னுாரில் இருந்து பிரிந்து செல்லும் கட்டளை மேட்டு வாய்க்கால்-களில் தண்ணீர் திறக்கப்பட்டு, விவசாய நிலங்களுக்கு செல்கிறது.
இந்த தண்ணீரை, வாழை சாகுபடிக்கு பயன்படுத்தி வருகின்-றனர். இதன் மூலம் விளைந்த வாழைத்தார்களை அறுவடை செய்து லாலாப்பேட்டை வாழைக்காய் ஏலம் கமிஷன் மண்டியில் வைத்து விற்பனை செய்கின்றனர். பூவன் தார், 300 ரூபாய், ரஸ்-தாளி, 250 ரூபாய், கற்பூரவள்ளி, 200 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் அதிகளவில் வாங்கிச் சென்றனர்.

