தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பா.ஜ., நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்

பா.ஜ., நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்

பா.ஜ., நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்


ADDED : ஆக 10, 2024 06:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 10, 2024 06:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுாரில் மேற்கு ஒன்றிய, பா.ஜ., சார்பில் கட்சி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் துரைசாமி பேசியதாவது:

மகளிர், விவசாயிகள், இளைஞர்கள் ஆகிய அனைத்து தரப்பு மக்-களை முன்னேற்றும் வகையில், நாட்டை சிறப்பான முறையில் பிரதமர் மோடி ஆட்சி நடத்தி வருகிறார். ஆனால் தி.மு.க., அரசு மத்திய அரசு பற்றி தவறாக மக்களிடம் பிரசாரம் செய்து வருகி-றது. தமிழ்நாட்டிற்கு தேவையான வெள்ள நிவரணம் நிதி தரப்-பட்டுள்ளது. அதை முழுமையாக பயன்படுத்தாமல் நிதியை வீணாக செலவு செய்து வருகின்றனர்.

வழக்கறிஞர்கள் தொழில் பாதுகாப்புடன் இருக்கும் வகையில், புதிய மூன்று சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பெண்களுக்கு, 33 சதவீதம் இட ஒதுக்கீடு, இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு, மாநில அரசுகளுக்கு தேவையான வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு என பல சேவைகளை மத்திய அரசு செய்து வருகிறது.

இவ்வாறு பேசினார்.

மாநில மகளிர் அணி துணை செயலர் மீனா, மாயனுார் பஞ்சா-யத்து தலைவர் கற்பகவள்ளி, மாவட்ட உள்ளாட்சி பிரிவு தலைவர் பாக்கிய ரகுபதி, மேற்கு ஒன்றிய தலைவர் சரவணன், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us